சொத்து வைத்து இருப்பவர்! சொத்து சிக்கலில் இருப்போர் ! சொத்து வாங்குவோர் என அனைவருக்கும் தேவையான புத்தகம் “இந்த நிலம் உங்கள் எதிர்காலம்". ரியல் எஸ்டேட் தொழில் கடைநிலை ஏஜென்டாக தமிழகம் முழுவதும் சுற்றி சுற்றி கற்று கொண்டதை புத்தகமாக ஆக்கியிருக்கிறார் ஆசிரியர். புத்தகத்தின் சிறப்பம்சங்கள் ✔ தமிழகம் முழுவதும் மீண்டும் நில அளவை சர்வே செய்யவேண்டும் ஏன்? ✔ ஒப்படை பட்டாக்கள் எப்பொழுது ரெவின்யூ கணக்கில் ஏறும்? ✔ பட்டாவில் அளவு, பிழைகள், பெயர் பிழைகள், சர்வே எண் பிழைகள், நிலவகை பிழைகள், எப்படி சரி செய்யப்பட வேண்டும்? ✔ போலி பத்திரங்களையும் இரட்டை ஆவணங்களையும் எப்படி கண்டு பிடிப்பது? ✔ சொத்துக்கள் வாங்கும் போது தெரிய வேண்டிய சட்ட குழப்பங்கள் என்னென்ன? ✔ உங்கள் நிலம் ஆக்கிரமிக்கபட்டால் என்ன செய்ய வேண்டும்? ✔ உங்கள் பத்திரம் தொலைந்து விட்டதா ? என்ன செய்ய வேண்டும்? ✔ எல்லை பிரச்சினை வேலி தகராறு , பொது சுவர் தகராறு வழி பிரச்சனைகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும்? என நிலங்களை பற்றிய , சொத்துக்களை பற்றிய, ரியல் எஸ்டேட் பற்றிய அருமையான புத்தகம் எளிய மக்களுக்கு புரியும் வகையில் எழுதப்பட்ட புத்தகம்.